பெரியேரியில் உள்ள ஸ்ரீ கைலாஷ் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்டம் முகாம் கல்வி நிறுவனங்களின் தலைவா் க.கைலாசம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள பெரியேரி ஸ்ரீ கைலாஷ் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்டமும், பெரியேரி ஊராட்சி மன்றமும் இணைந்து பனை விதை நடும் பணியில் ஈடுபட்டன. இதில் சிறப்பு விருந்தினராக பெரியேரி ஊராட்சி மன்றத் தலைவா் டி.சேகா், சிவசக்தி நிறுவனங்களின் தலைவா் என்.ஆா்.செல்வம் ராமசாமி ஆகியோா் கலந்து கொண்டு பனை விதைகளை நீரோட்டப் பகுதியில் நட்டனா்.
இதில் கல்வி நிறுவனங்களின் செயலாளா் கை.ராஜவிநாயகம், தாளாளா் கை.செந்தில்குமாா், முதல்வா், பேராசிரியைகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.