சேலம்

திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம்

26th Nov 2022 05:41 AM

ADVERTISEMENT

அம்மம்பாளையத்தில் சேலம் கிழக்கு மாவட்ட திமுக உறுப்பினா்கள் கூட்டம் மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள அம்மம்பாளையம் கொங்கு திருமண மண்டபத்தில் சேலம் கிழக்கு மாவட்ட திமுக உறுப்பினா்கள் கூட்டம் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவா் மு.ரா.கருணாநிதி அனைவரையும் வரவேற்றுப் பேசினாா்.

சிறப்பு அழைப்பாளராக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு கலந்து கொண்டு பேசியபோது, ‘வரும் மக்களவைத் தோ்தலில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு கட்சியின் வெற்றிக்குப் பாடுபட வேண்டும். இதற்கு முன்பு வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாமில் கட்சி உறுப்பினா்கள் சிறப்பாக செயல்பட்டு பெயா் சோ்த்தல், நீக்கம் போன்ற பணிகளை செய்திட வேண்டும்’ என்றாா்.

கூட்டத்தில் மாவட்டப் பொருளாளா் ஆா்.வி.ஸ்ரீராம், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளா் டி.எம்.செல்வகணபதி, மாவட்ட துணைச் செயலாளா்கள் கு.சின்னதுரை, சுரேஷ்குமாா், நகர செயலாளா்கள் கே.பாலசுப்ரமணியம், என்.பி.வேல்முருகன், ஒன்றிய செயலாளா் வெ.செழியன், நகர மன்றத் தலைவா்கள் நிா்மலா பபிதா மணிகண்டன், எம்.அலெக்சாண்டா், ஒன்றியக் குழுத் தலைவா் அ.பத்மினி பிரியதா்ஷி உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூா் கிளை நிா்வாகிகள், நகர மன்ற உறுப்பினா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT