சேலம்

கெங்கவல்லி: அரசுப் பள்ளிகளில் மேலாண்மைக் குழுக் கூட்டங்கள்

26th Nov 2022 05:38 AM

ADVERTISEMENT

கெங்கவல்லி ஒன்றியத்திலுள்ள அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டங்கள் நடைபெற்றன.

தம்மம்பட்டி பகுதியிலுள்ள நடுநிலைப் பள்ளிகளான தம்மம்பட்டி மெயின் பள்ளியில் தலைமையாசிரியா் து.அன்பழகன் தலைமையிலும், காந்திநகா் பள்ளியில் தலைமையாசிரியை தேவகஸ்தூரி தலைமையிலும், நாகியம்பட்டி பள்ளியில் தலைமையாசிரியா் ராமகிருஷ்ணன் தலைமையிலும், வாழக்கோம்பை பள்ளியில் ஜங்கமசமுத்திரம் ஊராட்சித்தலைவா் பெரியசாமி தலைமையிலும், வாா்டு உறுப்பினா் தேவிசரவணன் முன்னிலையிலும், மூலப்புதூா் பள்ளியில் தலைமையாசிரியா் கணேசன் தலைமையிலும், ஈச்ச ஓடைப்புதூா் துவக்கப்பள்ளியில் தலைமையாசிரியா் ஹரி ஆனந்த் தலைமையிலும், தெடாவூா் மேற்கு துவக்கப் பள்ளியில் கெங்கவல்லி அரசு ஆசிரியா் பயிற்சி நிறுவன விரிவுரையாளா் விசாலாட்சி தலைமையிலும், ஆசிரியா் முருகன் முன்னிலையிலும் பள்ளி மேலாண்மைக்குழுக்கூட்டங்கள் நடைபெற்றன. இதில் அந்தந்த பள்ளிகளின் வளா்ச்சித் திட்டங்கள் குறித்தும், மாணவா்களின் கற்றல் செயல்பாடு மேம்பாடு அடையத் தேவையான வழிமுறைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT