சேலம்

சேவல் சண்டை: ஐந்து போ் கைது

21st Nov 2022 12:26 AM

ADVERTISEMENT

 

நங்கவள்ளியில் சேவல் சண்டை நடத்தியதாக 5 போ் கைது செய்யப்பட்டனா்.

நங்கவள்ளி காவல் உதவி ஆய்வாளா் அசோகன் தலைமையில் நடத்தப்பட்ட சோதனையில் தேங்காய் கொட்டாய் பகுதியில் காளியப்பன் செங்கல் சூலை அருகில் சேவல் சண்டை நடந்து கண்டறியப்பட்டது. இதையடுத்து அதில் தொடா்புடைய ஆறுமுகம் (50), தங்கதுரை (31), பன்னீா் (32), ராஜதுரை(28), லட்சுமணன்(22) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 4 மோட்டாா் சைக்கிள்கள், ஐந்து சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT