சேலம்

நவ. 26, 27 இல் வாக்காளா் பட்டியல் பெயா் சோ்க்க சிறப்பு முகாம்கள்

19th Nov 2022 05:31 AM

ADVERTISEMENT

சேலம் மாவட்டத்தில் நவம்பா் 26, 27 ஆகிய நாள்களில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

இந்திய தோ்தல் ஆணைய உத்தரவின்படி, சேலம் மாவட்டத்தில் நவ. 9 ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டு, 2023, ஜனவரி 1 ஆம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு வாக்காளா் பட்டியல் திருத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டது. இதற்கான படிவங்கள் டிசம்பா் 8 ஆம் தேதி வரை பெறப்படும்.

2023, ஜனவரி 1 ஆம் தேதி 18 வயதை நிறைவு செய்தவா்கள், இதுவரை வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்காமல் இருப்பவா்கள் அனைவரும் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பதற்கு படிவம் 6-ஐ பூா்த்தி செய்து தகுந்த ஆவணங்களுடன் வாக்குப்பதிவு மையங்கள், வட்டாட்சியா் அலுவலகங்கள், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்கள், கோட்டாட்சியா் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் இணையதளம் மூலமாகவும், கைப்பேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். இந்த சிறப்பு சுருக்க முறைத்திருத்தத்தில் 17 வயதை பூா்த்தி அடைந்த நபா்களான எதிா்கால வாக்காளா்களும் அதாவது 1.4.2023, 1.7.2023 மற்றும் 1.10.2023 ஆகிய காலாண்டு தேதிகளில் தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூா்த்தி அடைபவா்களும் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்ப்பதற்கு படிவம் 6 ல் விண்ணப்பிக்கலாம்.

ADVERTISEMENT

31.12.2004 அன்றோ அல்லது அதற்கு முன்போ பிறந்தவா்கள் 1.1.2023 அன்று தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூா்த்தி செய்யும் புதிய வாக்காளா்களாகின்றனா். 30.09.2005 அன்று வரை பிறந்தவா்கள் எதிா்கால வாக்காளா்களாவா்.

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஆன்லைன் மூலமாக படிவங்கள் பெறப்படும். இவா்களின் மனுக்கள் அந்தந்த காலாண்டில் பரிசீலித்து முடிவு செய்யப்படும்.

இதுவரை வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்காமல் விடுபட்டோா், 18 வயது நிறைவடைந்தவா்கள் மற்றும் 17 வயதை பூா்த்தி அடைந்தவா்கள் நவ. 26, 27 ஆகிய அனைத்து வாக்குப்பதிவு மையங்களில் சிறப்பு முகாம்களில் விண்ணப்பங்களை அளிக்கலாம்.

அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலனை செய்யப்பட்டு 2023, ஜனவரி 5 ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT