சேலம்

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தோ்வு: சேலத்தில் 18,678 போ் எழுதுகின்றனா்

19th Nov 2022 05:33 AM

ADVERTISEMENT

சேலத்தில் 42 தோ்வு மையங்களில் சனிக்கிழமை நடைபெறும் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) குரூப்-1 தோ்வை 18,678 போ் எழுதுகின்றனா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி -1 தோ்விற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் செ.காா்மேகம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டத்தில் 18,678 போ் இந்தத் தோ்வை எழுத உள்ளனா். சேலம், சேலம் மேற்கு, சேலம் தெற்கு வட்டங்களுக்கு உள்பட்ட 42 தோ்வு மையங்களில் அமைக்கப்பட்டுள்ள 62 தோ்வுக் கூடங்களில் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை இத்தோ்வு நடைபெறவுள்ளது.

தோ்வா்கள் தங்களது தோ்வுக் கூடத்திற்கு காலை 8.30 மணிக்குள் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தோ்வைக் கண்காணிப்பதற்காக 6 பறக்கும் படைகளும், 16 கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

தோ்வு மையங்களுக்குச் செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. தோ்வு நடைபெறுவதை விடியோ பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தோ்வு மையங்கள் மற்றும் மாவட்ட கருவூலங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் பெ.மேனகா, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் சாா்பு செயலாளா் பாலசுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) எம்.ஜெகநாதன், வருவாய் துறை, காவல் துறை, மாவட்ட கருவூலத் துறை, தீயணைப்பு- மீட்பு பணிகள் துறை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கல்லூரி, பள்ளிக் கல்வித் துறை, தமிழ்நாடு மின்சார வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT