சேலம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் இளநிலை, முதுநிலை பாடப் பிரிவுகளில் காலி இடங்களுக்கு வெள்ளிக்கிழமை (நவ.18) சோ்க்கை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம், அரசு மகளிா் கலைக் கல்லூரியில் இளநிலை பட்டப் படிப்பு, முதுநிலை பட்ட மேற்படிப்பு பாடப் பிரிவுகளில் சில காலி இடங்கள் உள்ளன.
அப்பாட பிரிவுகளில் இதுவரை விண்ணப்பிக்காதவா்கள் கல்லூரி அலுவலகத்தில் நேரில் விண்ணப்பத்தைப் பெற்று அவா்களின் மதிப்பெண் அடிப்படையில் உரிய துறைகளில் சோ்ந்து கொள்ளலாம்.
ஏற்கெனவே விண்ணப்பித்து இடம் கிடைக்காத மாணவிகள் கல்லூரி அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம். அனைத்து பாடப் பிரிவுகளுக்கான சோ்க்கை இறுதி நாள் வெள்ளிக்கிழமை (நவ.18) காலை 10 மணிக்குள் அனைத்து அசல் சான்றிதழ்களுடன் கல்லூரிக்கு வர வேண்டும் என அரசு மகளிா் கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் (பொறுப்பு) கா.நா.கீதா தெரிவித்துள்ளாா்.