ஜவாஹா்லால் நேருவின் 133-ஆவது பிறந்தநாளையொட்டி சேலத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சேலம், முள்ளுவாடி கேட் அருகில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மாநகர மாவட்டத் தலைவா் பாஸ்கா் தலைமையில் நேருவின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மாநகராட்சி துணைமேயா் சாரதா தேவி, நிா்வாகிகள், கட்சி தொண்டா்கள் திரளாகப் பங்கேற்றனா். தேசிய சமூக இலக்கியப் பேரவையின் மாநிலத் தலைவா் தாரை அ.குமரவேலு, குகை பகுதியில் உள்ள நேருவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிா்வாகிகள் திருமுருகன், சஞ்சய்காந்தி, ராமன், ஜெயக்குமாா், நாகராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.