சேலம்

சேலத்தில் சாலையை காணவில்லை: வடிவேலு பாணியில் மார்க்சிஸ்டு கம்யூ. புகார்

14th Nov 2022 02:49 PM

ADVERTISEMENT

சேலத்தில் கிணற்றைக் காணோம் என்ற வடிவேலு பாணியில் சாலையை காணவில்லை என மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. 

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 26 வது கோட்டத்திற்குட்பட்ட சாமிநாதபுரம் கௌரம்மாள் காலணி பகுதியில் 10 வருடத்திற்கு முன்பு வீட்டுமனைகளாக பிரிக்கப்பட்டு தற்போது நூற்றுக்கும் மேற்பட்டோர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். மேலும் 20 அடி அகலம் 100 அடி நீளம் கொண்ட சாலை பொது பயன்பாட்டுக்காக விடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் தனி நபர் ஒருவர் பொது பயன்பாட்டுக்காக விடப்பட்ட சாலையை ஆக்கிரமித்து வீடு கட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி மனு கொடுத்து எந்த முன்னேற்றமும் இல்லாததால் மேலும் காலியாக உள்ள இடத்தை சிலர் ஆக்கிரமித்து வீடு கட்ட முயற்சி எடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்தும் பொது பயன்பாட்டுக்கு விடப்பட்ட சாலை காணவில்லை எனக் கூறி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று புகார் மனு வழங்கப்பட்டது. 

ADVERTISEMENT

இதுகுறித்து சேலம் வடக்கு மாநகர செயலாளர் பிரவீன் குமார் கூறும்போது, கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பொது பயன்பாட்டிற்காக விடப்பட்ட சாலை சிலர் ஆக்கிரமித்து வீடு கட்டி வருவதாகவும் மேலும் உள்ள இடத்தை தற்போது சிலர் ஆக்கிரமித்து ஆளுங்கட்சி பெயரை சொல்லி வீடு கட்ட நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இதனால் சாலை இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

இதையும் படிக்க- சென்னையில் மாரடைப்பால் மனைவி மரணம்: துக்கம் தாளாமல் கணவரும் தூக்கிட்டுத் தற்கொலை

எனவே காணாமல் போன சாலையை கண்டுபிடித்து பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட இடத்தில் ஆய்வு செய்து சாலையை மீட்டெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இல்லையெனில் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாகவும் எச்சரிக்கை கொடுத்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT