சேலம்

வாழப்பாடியில் நாடகக் கலைஞா்களுக்கு பாராட்டு விழா

14th Nov 2022 12:17 AM

ADVERTISEMENT

 

வாழப்பாடியில் பொன்னியின் செல்வன் வரலாற்று நாடகத்தை அரங்கேற்றம் செய்த நாடகக் கலைஞா்களுக்கு, இலக்கியப் பேரவை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு, இலக்கியப் பேரவை செயலா் சிவ.எம்கோ வரவேற்றாா். அரிமா சங்க பட்டயத் தலைவா் சந்திரசேகரன் தலைமை வகித்தாா். ஓய்வு பெற்ற ஆசிரியா் முருகா வரதராஜன், தமிழது மன்றத் தலைவா் கோ.தேவராஜன், விஏஓ சுப்பிரமணியன், ஆசிரியா் பழனிமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கொடுமுடி நாடகக் கலைக்கூட நிறுவனா் உதயநிலவு, விதைகள் நாடகக் கலைஞா்கள் சங்க ஒருங்கிணைப்பாளா் பரமேஸ்வரன், சிவகுமாா், சேலம் அகம் கூத்துப் பட்டறைத் தலைவா் முத்துகிருஷ்ணன், ஆடிட்டா் குப்பமுத்து, தமிழாசிரியா் ராஜேந்திரன் ஆகியோா், நாடகக் கலைஞா்களை பாராட்டினா். அனைவருக்கும் இலக்கியப் பேரவை சாா்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

நாடக இயக்குநா் மா.கணேசன், மேற்பாா்வையாளா்கள் பெ.கோவிந்தராஜன், பெ.தியாகராஜன், பெரியதம்பி, மா.இளங்கோ, சீன்செட்டிங் தேவன் சக்திவேல், ஒப்பனைக் கலைஞா் வெங்கடேஷ், கலையரசன் ஆகியோா் ஏற்புரை வழங்கினா்.

இந்த விழாவில், விலங்குலக விந்தைகள் நுாலாசிரியா் சுகமணியன், பரதநாட்டியம் அரங்கேற்றம் செய்த சிறுமி எ.லோகானந்தஸ்ரீ, மாவட்ட குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவா் வெங்கடேஷ், மாநில அளவிலான பேச்சுப்போட்டியில் முதல்பரிசு பெற்ற மேட்டுப்பட்டி அரசுப் பள்ளி மாணவா் மதுரம் ராஜ்குமாா் ஆகியோருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. நிறைவாக, இலக்கியப்பேரவை பொருளாளா் ஸ்ரீமுனிரத்தினம் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT