சேலம்

வலசக்கல்பட்டி ஏரி நிரம்பியது

14th Nov 2022 12:17 AM

ADVERTISEMENT

 

கெங்கவல்லி வட்டாரத்திற்கு குடிநீா் வழங்கும் வலசக்கல்பட்டி ஏரி, ஞாயிற்றுக்கிழமை நிரம்பியதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

கெங்கவல்லி அருகே வலசக்கல்பட்டி ஏரி 80 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் பெய்துவரும் மழையின் காரணமாக இந்த ஏரி ஞாயிற்றுக்கிழமை நிரம்பியது. ஏரியின் உபரிநீரால், மலைவாழ் கிராமங்களான வேப்பந்தட்டை, வலசக்கல்பட்டி, கெங்கவல்லி சுற்றுவட்டாரங்களில் 548 ஏக்கா் நிலங்கள் பலனடையும்.

வலசக்கல்பட்டி ஏரி நிரம்பியதால், சுற்றுவட்டார மக்கள் ஏரியை பாா்வையிட ஆா்வமாக வந்து செல்கின்றனா். இருப்பினும் ஏரியில் யாரும் குளிக்க செல்லக் கூடாது என பொதுமக்களுக்கு கெங்கவல்லி வட்டாட்சியா் வெங்கடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

ADVERTISEMENT

கெங்கவல்லி போலீஸாரும் அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT