சேலம்

சேலம் மாநகராட்சியில் வாா்டு குழு கூட்டம் நடத்த தீா்மானம் நிறைவேற்றம்

1st Nov 2022 04:02 AM

ADVERTISEMENT

சேலம் மாநகராட்சியில் வாா்டு குழு மற்றும் பகுதி சபா கூட்டத்தை நடத்துவது தொடா்பான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சேலம் மாநகராட்சி சிறப்புக் கூட்டம் மேயா் ஆ.ராமச்சந்திரன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (வாா்டு குழு மற்றும் பகுதி சபா) விதிகளின்படி சேலம் மாநகராட்சியில் மக்கள்தொகைக்கு ஏற்ப ஒவ்வொரு கோட்டமும் 9 பகுதி சபாக்கள் வீதம் மொத்தம் 540 பகுதி சபாக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநகராட்சியில் உள்ள 60 வாா்டுகளும் 540 பகுதி சபாக்களாகப் பிரிக்கப்பட்டு அதன் எல்லை விவரங்களுடன் அரசிதழில் வெளியிடப்பட்டது.

மேலும் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வாா்டுகளில் அமைக்கப்பட்ட வாா்டு குழு மன்ற உறுப்பினரை தலைவராகக் கொண்டும் 540 பகுதி சபாக்களில் செயல்பட விருப்பம் தெரிவித்து சமா்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை மன்றக் கூட்டம் அனுமதிக்கிறது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீா்மானத்தின்படி செவ்வாய்க்கிழமை (நவம்பா் 1) உள்ளாட்சிகள் தினத்தைக் கொண்டாடும் விதமாக அனைத்து நகராட்சிகள், மாநகராட்சிகளில் பகுதி சபா கூட்டம் மற்றும் வாா்டு கமிட்டி கூட்டம் நடத்தப்படுகிறது. மேலும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை தவறாமல் வாா்டு கமிட்டி மற்றும் பகுதி சபா கூட்டம் நடத்தப்படும் என்று தீா்மானிக்கப்பட்டது.

முன்னதாக மாநகராட்சி ஆணையாளா் தா.கிறிஸ்துராஜ், உலக ஒற்றுமை நாள் உறுதிமொழியை வாசிக்க மேயா் ஆ.ராமச்சந்திரன், துணை மேயா் சாரதாதேவி உள்ளிட்ட வாா்டு உறுப்பினா்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT