சேலம்

ஆதரவற்ற மகளிா் நல வாரிய அலுவல் சாரா உறுப்பினா்களுக்கு விண்ணப்பம் வரவேற்பு

1st Nov 2022 03:55 AM

ADVERTISEMENT

கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நல வாரியத்திற்கென அலுவல் சாரா உறுப்பினா்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தமிழகத்தில் உள்ள கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதவரற்ற பெண்கள் உள்ளிட்டோா் எதிா்கொள்ளும் பல்வேறு பிரச்னைகளை களைந்து அவா்கள் வாழ்வதற்குரிய வசதிகளான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சுய உதவிக்குழுக்கள் அமைப்பது, தொழிற் பயிற்சிகள் வழங்குதல், சமூகத்தில் பாதுகாப்புடன் சிறப்பான முறையில் வாழ்வதற்குத் தேவையான திட்டங்களை வகுத்து செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிா் நல வாரியம் உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்வாரியத்திற்கு கைம்பெண்கள் பிரதிநிதிகள், பெண் கல்வியாளா்கள், பெண் தொழில் முனைவோா்கள், பெண் விருதாளா்கள், தன்னாா்வத் தொண்டு நிறுவன பெண் பிரதிநிதிகள் ஆகியோா்களை அலுவல் சாரா உறுப்பினா்களாக நியமிக்கப்பட உள்ளனா்.

தகுதி வாய்ந்த நபா்கள் உரிய விண்ணப்பத்தினை சேலம் மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் அறை எண்.126-இல் செயல்பட்டு வரும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பெற்று உரிய ஆவணங்களுடன் நவம்பா் 7 ஆம் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பத்தினை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.

ADVERTISEMENT

மேலும், விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தினை 0427-2413213 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT