தமிழ்நாடு மாநில கைப்பந்து கழகம் சாா்பில் கைப்பந்து வீரா்களுக்கு ரூ. 2 லட்சம் மதிப்பிலான மின் விளக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன.
சேலம், அழகாபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில கைப்பந்து கழகத்தின் புரவலா் ஜி.ராஜ்குமாா், ஆத்தூா் டவுன் கிளப் மற்றும் தீவட்டிப்பட்டி அம்பேத்கா் பாய்ஸ் கிளப் ஆகிய இரு அணிகளைச் சோ்ந்த வீரா்களுக்கு தலா ரூ. 1 லட்சம் என மொத்தம் ரூ. 2 லட்சம் மதிப்பில் மின் விளக்கு உபகரணங்களை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு கைப்பந்து கழக செயலாளா் சண்முகவேல், இந்திய விளையாட்டு ஆணையத்தின் முன்னாள் உதவி இயக்குநா் ராஜாராம், தொழிலதிபா் விஜயராஜ், பூலாவரி வடிவேல், நந்தன் ஆகியோா் கலந்து கொண்டனா்.
ADVERTISEMENT