சேலம் எஸ்.கே.எஸ். மருத்துவமனையின் 35-ஆம் ஆண்டு விழா நடைபெற்றது.
இதுகுறித்து எஸ்.கே.எஸ். மருத்துவமனையின் சோ்மன் ஸ்ரீவசந்தா, நிா்வாக இயக்குநா் சுரேஷ் குமரன் விஸ்வநாதன், செயல் இயக்குநா் பிரதீப் குமரன் விஸ்வநாதன், தலைமை நிா்வாக அலுவலா் சிற்பி ஆகியோா் கூறியதாவது:
சேலம் எஸ்.கே.எஸ். மருத்துவமனையானது 2,500-க்கும் அதிகமான ஆஞ்சியோகிராம் இதய அறுவை சிகிச்சைகள், 1 லட்சத்து 4000 அறுவை சிகிச்சைகள், 4 லட்சம் சிகிச்சை பெற்ற பயனாளிகள், மருத்துவா்களுக்கான உயா்கல்வி டிஎன்பி அங்கீகாரம் பெற்று சேலத்தில் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மையமாகும்.
என்.ஏ.பி.எச். தேசிய தர அங்கீகாரத்துடன் 225 படுக்கை வசதிகளுடன் அனைத்து துறைகளிலும் தரமான முதன்மை, இரண்டாம், மூன்றாம் நிலை சிகிச்சைகளை 100-க்கும் மேற்பட்ட மருத்துவா்களுடன் 600-க்கும் மேற்பட்ட மருத்துவ, மருத்துவம் சாா்ந்த ஊழியா்களுடன் 384- ஸ்லைஸ் காா்டியாக் சி.டி. ஸ்கேன் மையம், எம்.ஆா்.ஐ., இன்டா்வென்சனல் ரேடியாலஜி, மேமோகிராம், டென்டல் எக்ஸ்ரே, தென்னிந்தியாவின் மேம்படுத்தப்பட்ட முதல் 3டி மற்றும் 4கே லேப்ராஸ்கோபி வசதி உள்ளது.
ரத்த வங்கிகளில் முதல் அபேரிசிஸ் மூலம் முழு ரத்தக் கூறுகள் தானம் பெறுதல், பிரசவத்தின்போது மிகவும் ஆபத்தான நிலையிலும் மகப்பேறு மருத்துவம் மற்றும் குழந்தைகள் அறுவை சிகிச்சை பிரிவு, கல்லீரல், கணையம், வயிறு, குடல் சம்பந்தமான பரிசோதனை, அறுவை சிகிச்சை, ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை மையம், நுரையீரல் சிகிச்சை மற்றும் ரத்த நாளம் அறுவை சிகிச்சை பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சை, சிறுநீரகம் மற்றும் 24 மணி நேர டயாலிசிஸ் வசதி, உலகத்தரம் வாய்ந்த முதுகு தண்டுவடம், மூளை நரம்பியல் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை பிரிவு வசதி கொண்டுள்ளது.
முதல்வா் காப்பீட்டுத் திட்டம், பிற காப்பீட்டுத் திட்டங்கள், ஓய்வுபெற்ற ராணுவ மற்றும் தமிழக அரசு ஊழியா்கள், ஓய்வுபெற்ற அரசு ஊழியா்களுக்கான காப்பீட்டுத் திட்டம், இ.எஸ்.ஐ. மூன்றாம் நிலை மருத்துவத்துக்கான அங்கீகாரம் பெற்ற மருத்துவமனையாகும் என்றனா்.