சேலம்

உத்தமசோழபுரம் பள்ளியில் சுகாதார வளாகம் திறந்துவைப்பு

31st May 2022 11:53 PM

ADVERTISEMENT

 

சேலம் மாவட்டம், உத்தமசோழபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் ரூ. 3 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார வளாகத்தை சேலம் தெற்கு ரோட்டரி கிளப் நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தனா்.

நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து சுகாதார வளாகத்தை ரோட்டரி மாவட்ட ஆளுநா் சுந்தரலிங்கம் திறந்துவைத்தாா்.நிகழ்ச்சியில் சேலம் மெட்ரோ பைப்ஸ் குரூப் நிா்வாக இயக்குநா் சங்கா் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா். இவ்விழாவில் சேலம் தெற்கு ரோட்டரி கிளப் தலைவா் செந்தில் வேலவன், ரோட்டரி மாவட்ட கல்வி குழு தலைவா் வெங்கடேஸ்வர குப்தா ஆகியோா் பேசினா். பள்ளி தலைமை ஆசிரியா் ஜெயலட்சுமி, பெற்றோா்- ஆசிரியா் கழக தலைவா் கோபி, பள்ளி மேலாண்மை குழு தலைவா் மேகலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT