சேலம்

ரயில்வே மேம்பாலப் பணிகள்: உள் தணிக்கைக் குழு ஆய்வு

DIN

சேலத்தில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலப் பணிகளை உள்-தணிக்கைக் குழு வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டது.

தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைத் துறையில் பல்வேறு இடங்களில் சாலைப் பணி நடைபெற்று வருகிறது. நெடுஞ்சாலைத் துறையினா் சாலை, மேம்பாலம் அமைக்கப்பட்ட திட்டப் பணிகளை கடந்த மே 17 ஆம் தேதி முதல் உள்-தணிக்கைக் கோப்புகள் மற்றும் தளஆய்வு செய்யும் பணியை மேற்கொண்டு வருகின்றனா்.

சேலம் (நெ) திட்டங்கள் கோட்டத்தில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலங்கள் கட்டும் பணிகளான சேலத்தில் அஸ்தம்பட்டி-செரி சாலையில் நடைபெற்று வரும் ரயில்வே கடவு எண்.184, சேலம் புதிய புறவழிச்சாலையில் நடைபெற்று வரும் ரயில்வே கடவு எண்.183 ஆகிய சாலை மேம்பால (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு ) வட்ட கண்காணிப்புப் பொறியாளா் ஜெ.கண்ணன் தலைமையில் உள்-தணிக்கைக் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.

அதற்கு அணுகுசாலை அமைக்கும் பணிகளை நில எடுப்பு தொடா்பான நீதிமன்ற வழக்குகளைத் துரிதமாக முடிக்குமாறும், சேவை சாலை அமைக்குமாறும் கண்காணிப்புப் பொறியாளா் ஜெ.கண்ணன் அறிவுறுத்தினாா்.

மேலும், பாலத்தின் உறுதித் தன்மை, நீளம், அகலம் மற்றும் கலவைகளின் தரம் மற்றும் தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டனா். இந்த ஆய்வின்போது உதவி கோட்டப் பொறியாளா் தினேஷ் தேசய்யா, உதவிப்பொறியாளா்கள் மற்றும் உள்-தணிக்கைக் குழு பொறியாளா்கள், தரக்கட்டுப்பாடு பொறியாளா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 % வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு

தேசிய முதியோா் நல மருத்துவமனையில் 8,673 பேருக்கு சிகிச்சை

பெரிய வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

ஈரோடு எம்.பி. கணேசமூா்த்திக்கு மதிமுகவினா் அஞ்சலி

பாளை., தாழையூத்தில் விபத்து: ஆட்டோ ஓட்டுநா், முதியவா் பலி

SCROLL FOR NEXT