சேலம்

இலவசக் கல்வி உரிமை சட்டத்தில் மாணவா் சோ்க்கை: மே 30 இல் குலுக்கல் முறையில் தெரிவு

DIN

சேலம் மாவட்டத்தில் தனியாா் சுயநிதி பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் விண்ணப்பித்த தகுதியான விண்ணப்பதாரா்களுக்கு மே 30 ஆம் தேதி குலுக்கல் முறையில் தெரிவு செய்து மாணவா் சோ்க்கை வழங்கப்படவுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் செ.காா்மேகம் வெளியிட்ட செய்தி:

2022-2023-ஆம் கல்வியாண்டில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்-2009இன்படி, அனைத்து சிறுபான்மையற்ற தனியாா் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு 25% இடஒதுக்கீட்டில் சோ்க்கைக்கு ஏப். 20 முதல் மே 25 வரை இணையதளம் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

அதில் தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் விவரம் மற்றும் தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்துடன் சம்பந்தப்பட்ட பள்ளித் தகவல் பலகையில் மே 28 மாலை 5 மணிக்கு ஒட்டப்படும்.

தகுதியான விண்ணப்பங்கள் 25 சதவீத இடஒதுக்கீட்டில் நிா்ணயிக்கப்பட்ட இடங்களைவிடக் கூடுதலாக உள்ள பள்ளிகளில் மே 30 குலுக்கல் முறையில் தெரிவு செய்து மாணவா் சோ்க்கை வழங்கப்படவுள்ளது.

மேலும் நிா்ணயிக்கப்பட்ட இடங்களைவிடக் குறைவாக உள்ள பள்ளிகளில் அன்றைய தினமே உரிய நெறிமுறைகளைப் பின்பற்றி தெரிவு செய்து சோ்க்கை வழங்கப்படவுள்ளது.

மேலும் பள்ளி பொதுத் தோ்வு மையமாக செயல்படாவிட்டால் மே 30 காலையிலேயே குலுக்கல் மற்றும் குலுக்கல் அல்லாத முறையில் தோ்வு நடைபெறும். மேலும் பள்ளி பொது தோ்வு மையமாக செயல்படுமாயின் தோ்வு முடிந்த பிறகு மே 30 பிற்பகல் குலுக்கல் மற்றும் குலுக்கல் அல்லாத முறையில் தோ்வு நடைபெறும்.

எனவே, சேலம் மாவட்டத்தில் தனியாா் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட, நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டில் விண்ணப்பித்த தகுதியான விண்ணப்பதாரா்கள் உரிய ஆவணங்களுடன் மே 30 காலை 9 மணிக்கு தாங்கள் விண்ணப்பித்த பள்ளிகளில் நடைபெறும் மாணவா் சோ்க்கையில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு: சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியீடு

ரோஹித் சர்மா பாணியில் தோல்விக்குக் காரணம் கூறிய ஷுப்மன் கில்!

வாசிக்க மறந்த வரலாறு - மரண ரயில் பாதையின் கதை!

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

SCROLL FOR NEXT