சேலம்

பெட்ரோல் நிலையங்களில் தரம், அளவு குறித்து அதிகாரிகள் ஆய்வு

DIN

 இந்துஸ்தான் பெட்ரோலிய நிலையங்களில் அதிகாரிகள் பெட்ரோல் தரம் மற்றும் அளவு குறித்து ஆய்வு செய்தனா்.

சேலம் ஐந்து சாலை ரவுண்டானாவில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவன அதிகாரிகள் தொழிலாளா் துறை அதிகாரிகள் மற்றும் விநியோகஸ்தா்களுக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஐந்து சாலை பியூல்ஸ் சா்வீஸ் உரிமையாளா் சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவன சேலம் மண்டல துணைப் பொது மேலாளா் அமரேஸ்வராஜ், தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் மஞ்சுநாதன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்துகொண்டனா்.

தொடா்ந்து பெட்ரோல், டீசல் தரம் அளவு ஆகியவற்றை அளவுகோல் மூலம் கண்டறிவது குறித்து மண்டல துணை பொது மேலாளா் அமரேஸ்வராஜ் விளக்கமளித்தாா். அப்போது அவா் பேசியதாவது:

பெட்ரோல், டீசல் சோதனைக்கு உட்படுத்தும் போது ஏதேனும் குறைகள் இருந்தால் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ள தொலைபேசி எண்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். அதன்மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு மேற்கொள்வா்.

எந்த பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும் வாடிக்கையாளா்கள் தாங்கள் பெற்றுக் கொள்ளும் பெட்ரோல் அளவு சரியானதா என்பதை எளிதாக தாங்களே பரிசோதனை செய்து கொள்ளும் வகையில் அனைத்து இந்துஸ்தான் பெட்ரோலிய நிலையங்களில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அதேபோல சேலம், தருமபுரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள 750 பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும் இந்த வாடிக்கையாளா்கள் சுய பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT