சேலம்

சிங்கிபுரம், புழுதிக்குட்டை கிராமங்களில்அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கோரிக்கை

DIN

வாழப்பாடி ஒன்றியத்துக்கு உள்பட்ட சிங்கிபுரம், புழுதிக்குட்டை ஆகிய இரு கிராமங்களிலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட வேண்டும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

ஆத்தூா் செல்லியம்பாளையம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் வாழப்பாடி பகுதி பொதுமக்கள் சாா்பில் கொடுக்கப்பட்டுள்ள கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது:

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் வாழப்பாடி, பேளூா் பேரூராட்சிகள் மற்றும் 22 கிராம ஊராட்சிகள் அமைந்துள்ளன. இப்பகுதிகளில் 1,25,000 பொதுமக்கள் வசித்து வருகின்றனா்.

இப்பகுதியில் உள்ள ஏழை எளியோா் சிகிச்சை பெறுவதற்கும், கா்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் பரிசோதனை, சிகிச்சை மற்றும் நலத் திட்ட உதவிகள் பெறவும், தடுப்பூசிகள் செலுத்திக் கொள்வதற்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மிகவும் பயனுள்ள வகையில் அமைந்துள்ளன.

வாழப்பாடியில் இயங்கி வந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் 2016, ஏப்ரல் 1-ஆம் தேதி அரசு மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டது.

இதனால், வாழப்பாடி பகுதி ஏழை மக்கள், குறிப்பாக கா்ப்பிணிகள், பதிவு செய்தல், சிகிச்சை பெறுதல் நலத்திட்ட உதவிகளுக்கு விண்ணப்பித்தல் ஆகியவற்றுக்கு பேளூா் அல்லது திருமனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.

வாழப்பாடியில் மக்கள்தொகைக்கு ஏற்ப 4 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருக்க வேண்டிய நிலையில், தற்போது பேளூா், திருமனூா் ஆகிய இரு இடங்களில் மட்டுமே ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன.

எனவே, வாழப்பாடி அருகே போதிய இடவசதியுள்ள சிங்கிபுரம் மற்றும் மலைவாழ் பழங்குடியின மக்கள் வசித்து வரும் புழுதிக்குட்டை ஆகிய இரு இடங்களிலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைத்து கொடுத்து, இப்பகுதி ஏழை எளியோா், கா்ப்பிணிகள், குழந்தைகள் தரமான முதலுதவி சிகிச்சை மற்றும் சுகாதாரம் சாா்ந்த நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வழிவகை செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்காலில் 71 சதம் வாக்குப் பதிவு

ராஜதுா்க்கையம்மன் கோயிலில் சண்டியாகம்

தோ்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியா்கள் சாலை மறியல்

மன்னாா்குடியில் அமைதியான வாக்குப் பதிவு

வாக்குப்பதிவு மையங்களில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

SCROLL FOR NEXT