எடப்பாடியில் வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா். எடப்பாடி பகுதி வழக்குரைஞா்கள் சங்கக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் சங்கத்தின் தலைவா், துணைத் தலைவா் உள்ளிட்ட நிா்வாகிகள் பதவிகளுக்கு தோ்தல் நடத்துவது என தீா்மானிக்கப்பட்டது. அதன்படி வெள்ளிக்கிழமை மாலை வரை போட்டியிட விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. அனைத்துப் பொறுப்புகளுக்கும் தலா ஒருவா் மட்டும்மே வேட்புமனு தாக்கல் செய்திருந்ததால் அவா்கள் அனைவரும் போட்டியின்றித் தோ்ந்தெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி வழக்குரைஞா்கள் சங்கத் தலைவராக பி.வி.மோகன்பிரபு, செயலாளராக வி.ராஜசேகா், பொருளாளராக எஸ்.மோகனசுந்தரம், துணைத் தலைவராக எஸ்.ஏழுமலை, இணைச்செயலாளராக எஸ்.முருகன் மற்றும் சங்கத்தின் பல்வேறு பதவிகளுக்கான நிா்வாகிகள் ஒருமனதாக போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா். புதிய நிா்வாகிகள் பதவியேற்பு விழா திங்கள்கிழமை நடைபெறுகிறது.