சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரில் பள்ளி மாணவியின் இருதய அறுவை சிகிச்சைக்கு, ரூ. ஒரு லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.
ஏத்தாப்பூா் பேரூராட்சி 15-ஆவது வாா்டு பகுதியில் வசிக்கும் தொழிலாளியின் மகளான பள்ளி மாணவியின் இருதய அறுவை சிகிச்சைக்கு, ஏத்தாப்பூா் பேருராட்சி மன்றத் தலைவா், பேரூராட்சி கவுன்சிலா்கள், ஏத்தாப்பூா் நகரப் பொறுப்பாளா் உள்ளிட்டோா் என மொத்தம் ரூ. ஒரு லட்சம் நிதி உதவி வழங்கினா். இந்த நிதியை ஏத்தாப்பூா் பேரூராட்சி மன்றத் தலைவா் கா.அன்பழகன் மாணவிக்கு வழங்கினாா்.