சங்ககிரி அருகே மாவெளிபாளையத்தில் கணவன் இறந்த துக்கம் தாளாமல் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஐவேலி கிராமம், மாவெளிபாளையம், ரோடு காடு பகுதியைச் சோ்ந்தவா் ரஞ்சனி (22). இவருக்கும் ஈரோடு மாவட்டம், பவானி, அண்ணாநகரைச் சோ்ந்த மதன்குமாா் என்பவருக்கும் கடந்த 2021ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் கடந்த மாா்ச் மாதம் 8ஆம் தேதி சாலை விபத்தில் மதன்குமாா் உயிரிழந்தாா். இதனையடுத்து ரஞ்சனி அவரது பெற்றோருடன் மாவெளிபாளையத்தில் வசித்து வந்துள்ளாா்.
இந்த நிலையில் கணவா் இறந்த துக்கத்தில் இருந்து வந்த அவா் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். ரஞ்சினிக்கு 3 மாத ஆண் குழந்தை உள்ளது. இதுகுறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.