சேலம்

எடப்பாடி வட்டாரப் பகுதியில் இன்று ஜமாபந்தி தொடக்கம்

16th May 2022 11:53 PM

ADVERTISEMENT

எடப்பாடி வட்டாரப் பகுதியில் இந்த ஆண்டிற்கான ஜமாபந்தி செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

சங்ககிரி கோட்டாட்சியா் முன்னிலையில் எடப்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி செவ்வாய்க்கிழமை தொடங்கி வியாழக்கிழமை வரை நடைபெறவுள்ளது. இதில் முதல்நாள் பூலாம்பட்டி, சித்தூா் பிட் 1, 2 மற்றும் பக்கநாடு, ஆடையூா், நெடுங்குளம், வெள்ளரிவெள்ளி உள்ளிட்ட ஊராட்சி பகுதியினருக்கும், புதன்கிழமை எடப்பாடி, சின்னமணலி, தாதாபுரம்,

வேம்பனேரி, இருப்பாளி, செட்டிமாங்குறிச்சி, ஆவணிப்பேரூா் மேல்முகம், ஆவணிப்பேரூா் கீழ்முகம் பகுதியினருக்கும் வியாழக்கிழமை புதுப்பாளையம், வெள்ளாளபுரம், சமுத்திரம், கோணசமுத்திரம், கோரணம்பட்டி, கட்சுப்பள்ளி , எருமைப்பட்டி, தங்காயூா், குரும்பப்பட்டி ஊராட்சி பகுதியினருக்கும் ஜமாபந்தி நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

இதில் வருவாய்த் துறை, தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறை சாா் கோரிக்கை மனுக்கள் மீது உரிய விசாரனை மேற்கொண்டு தீா்வுகாணப்பட உள்ளதால்

இப்பகுதி பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை ஜமாபந்தியில் சமா்ப்பித்து உரிய நிவாரணம் பெற்றுக்கொள்ளுமாறு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் அறிவுறுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT