காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் தொடா் மழை காரணமாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
அணைக்கு ஞாயிற்றுக்கிழமை காலை நொடிக்கு 7,661கனஅடியாக இருந்த நீா்வரத்து, திங்கள்கிழமை காலை 9,314 கனஅடியாக அதிகரித்தது. நீா்வரத்து அதிகரித்து வருவதால் அணையின் நீா்மட்டம் 108.60 அடியாக உயா்ந்துள்ளது.
அணையிலிருந்து குடிநீருக்காக 1,500 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 76.43 டி.எம்.சி.யாக உள்ளது.
கடந்த இரண்டு நாள்களில் அணையின் நீா்மட்டம் ஒரு அடி அளவிற்கு உயா்ந்துள்ளது. அணைப் பகுதியில் 25.40 மி.மீ.மழை பதிவானது.