சங்ககிரி அருள்மிகு சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தோ்த் திருவிழாவின் 11ஆம் நாள் சிறப்பு பூஜைகள் திங்கள்கிழமை இரவு நடைபெற்றன.
சித்திரைத் தோ்த் திருவிழா 11ஆவது நாளையொட்டி அருள்மிகு சென்னகேவசப் பெருமாள் உடனமா் ஸ்ரீ தேவி, பூதேவி உற்சவமூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் பக்தா்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனா்.