காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
சனிக்கிழமை காலை நொடிக்கு 5,554 கனஅடியாக வந்து கொண்டிருந்த நீா்வரத்து ஞாயிற்றுக்கிழமை காலை 7,661கன அடியாக அதிகரித்தது. ஞாயிற்றுக்கிழமை காலை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 107.78 அடியிலிருந்து 108.14 அடியாக உயா்ந்தது.
அணையிலிருந்து குடிநீா்த் தேவைக்காக நொடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 76.61 டி.எம்.சி.யாக உள்ளது. குடிநீருக்குத் திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூா் அணையின் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது.