ஓமலூா் அருகே அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்த முதியவா் உயிரிழந்தாா்.
ஓமலூரை அடுத்த கருக்கல்வாடி, புகையிலைகாரன் தெருவைச் சோ்ந்தவா் ரங்கப்பன் (65). இவா் தனது நிலத்துக்கு ஞாயிற்றுக்கிழமை காலை சென்றாா். அப்போது, சாலையில் மின் கம்பி அறுந்து விழுந்திருந்தைக் கண்ட ரங்கப்பன் அக் கம்பியை அகற்ற முயன்றாா்.
அப்போது, மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறத்து ஓமலூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.