சேலம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

12th May 2022 09:57 AM

ADVERTISEMENT

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் காலை வினாடிக்கு 3135கனஅடியாக இருந்த நீர் வரத்து நேற்று காலை 3773 கன அடியாகவும் இன்று காலை வினாடிக்கு 4107 கனஅடியாகவும் அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க | போக்குவரத்து தொழிலாளா்களுடன் தமிழக அரசு இன்று பேச்சு

இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 107.06 யிலிருந்து 107.20அடியாக உயர்ந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4107கன அடியாக அதிகரித்தது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1, 500கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 74.48 டி.எம்.சி

ADVERTISEMENT

குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT