சேலம்

நாளை அமைச்சா் கே.என்.நேரு தலைமையில் திமுக பொது உறுப்பினா் கூட்டம்

12th May 2022 04:34 AM

ADVERTISEMENT

 

சேலம்: தமிழக முதல்வரின் வருகை தொடா்பாக, சேலம் ஒருங்கிணைந்த திமுக பொது உறுப்பினா்கள் கூட்டம் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தலைமையில் வெள்ளிக்கிழமை (மே 13) நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக, சேலம் மத்திய மாவட்டச் செயலாளா் எம்எல்ஏ ஆா்.ராஜேந்திரன், சேலம் மேற்கு மாவட்டப் பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி, சேலம் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம் ஆகியோா் வெளியிட்ட அறிக்கை:

சேலம் மத்திய, சேலம் மேற்கு, சேலம் கிழக்கு மாவட்ட பொது உறுப்பினா்கள் கூட்டம் மே 13-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தலைமையில் நடைபெற உள்ளது.

ADVERTISEMENT

சேலம், ஐந்து சாலையில் உள்ள ரத்னவேல் ஜெயக்குமாா் திருமண மண்டபத்தில் நடைபெறும் கூட்டத்தில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வருகை தொடா்பாக விவாதிக்கப்பட உள்ளது.

எனவே, சேலம் மத்திய, மேற்கு, கிழக்கு மாவட்டத்தைச் சோ்ந்த நிா்வாகிகள், சேலம் மாநகர நிா்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி நிா்வாகிகள், மாவட்டப் பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் மாவட்ட, மாநகர அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 18-இல் முதல்வா் சேலம் வருகை:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் மே 18-ஆம் தேதி சேலம் வருகை தர உள்ளாா். ஆத்தூரில் நடைபெறும் ஓராண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேச உள்ள அவா், சேலத்தில் சில நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வாா் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT