சேலம்

அப்பா பைத்தியம் சுவாமி கோயிலில் 163-ஆம் ஆண்டு பிறந்த நாள் பூஜை

12th May 2022 04:34 AM

ADVERTISEMENT

 

சேலம்: சேலம், சூரமங்கலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீசற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகள் 163-ஆண்டு பிறந்த நாள் பூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, ஞான விநாயகா், ஞான முருகா், ஸ்ரீசற்குரு அப்பா பைத்தியம் சுவாமிகளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. பகல் 12 மணி அளவில் மகா தீபாராதனை நடைபெற்றது.

இதனிடையே, புதுவை உள்துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயம் உள்ளிட்டோா் அப்பா பைத்தியம் சுவாமி கோயிலுக்கு வந்து தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT

சேலம், சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா். தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி முத்துமணிராஜா உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT