சேலம்

புதிய கொடி மரம் பிரதிஷ்டை

5th May 2022 05:13 AM

ADVERTISEMENT

 

சங்ககிரி: சங்ககிரி, கல்வடங்கம் அங்காளம்மன் கோயில் வளாகத்தில் புதிய கொடிமரம் புதன்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

அங்காளம்மன் கோயிலில் இருந்த கொடிமரம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழுதடைந்தது. இதனால் புதன்கிழமை 30 அடி உயரமுள்ள புதிய கொடி மரத்துக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷகங்கள் செய்யப்பட்டு கோயில் கருவறைக்கு முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்டது.

சுவாமிக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தா்கள் கலந்து கொண்டு கொடி மரம், சுவாமியை வழிப்பட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT