சேலம்

பதவி உயா்வு

5th May 2022 05:13 AM

ADVERTISEMENT

 

சேலம்: சேலத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா்களாக பதவி உயா்வு பெற்ற 62 பேருக்கு காவல் ஆணையா் நஜ்மல் ஹோடா வாழ்த்து தெரிவித்தாா்.

1997 இல் காவல் துறையில் சோ்ந்த 62 போ் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பதவி உயா்வு பெற்றனா். அவா்களுக்கு மாநகரக் காவல் ஆணையா் நஜ்மல் ஹோடா வாழ்த்து தெரிவித்தாா். காவலா்களும், காவலா்களின் குழந்தைகளும் புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை வளா்த்துக் கொள்ள வேண்டும் என ஆணையா் கேட்டுக் கொண்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT