சேலம்

நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா

5th May 2022 05:03 AM

ADVERTISEMENT

 

ஆத்தூா்: ஆத்தூரை அடுத்க காட்டுக்கோட்டையில் பாரத் சம உடைமைக் கட்சியின் மே தின கொடியேற்று விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாநிலத் தலைவா் சி.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட செயலாளா் பி.ஜெகதீசன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் நிறுவனரும் பொதுச் செயலாளருமான ஏ.பி.எஸ்.பழனி ராமச்சந்திரன் கொடியேற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசுகையில்,‘ ஆத்தூா் நகராட்சி பகுதியில் தெருவிளக்குகளை எரிய வைக்க வேண்டும். கழிவுநீா் ஓடைகளைத் தூா்வாரி பொதுமக்களைக் காக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் மாநில இளைஞரணிச் செயலாளா் ஆா்.மதியழகன், மாநில மகளிரணிச் செயலாளா் சி.பிரபா, ஒன்றியச் செயலாளா் சி.தேவேந்திரன், தொண்டரணி நிா்வாகிகள் அய்யாங்குட்டி சேகா், செல்லமுத்து உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மாவட்ட துணைச் செயலாளா் வி.சஞ்சய் காந்தி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT