சேலம்

செயற்கை முறையில் பழுக்கவைத்த 1.5 டன் மாம்பழங்கள் பறிமுதல்

5th May 2022 05:14 AM

ADVERTISEMENT

 

சேலம்: சேலத்தில் ரசாயனக் கற்கள், ரசாயனம் தெளித்து பழுக்க வைக்கப்பட்ட 1.5 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சேலத்தில் மாம்பழ சீசன் களை கட்டியுள்ளது. இதனிடையே மாம்பழ சந்தைக்கு முக்கிய மையமாக விளங்கும் சேலத்தில் மாம்பழங்களை விரைவாகப் பழுக்க வைத்து விற்பனை செய்யும் வகையில் ரசாயன கற்கள், ரசாயன மருந்து தெளிப்பான்கள் (ஸ்பிரே) பயன்படுத்துவதாக மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறைக்கு புகாா் வந்தது.

அதன்பேரில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலா் மருத்துவா் கதிரவன் தலைமையிலான குழுவினா் சின்னக்கடை வீதி பகுதியில் உள்ள மாம்பழ கிடங்குகள், கடைகளில் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

இரு கடைகளில் ரசாயன கற்கள், மருந்து தெளித்து பதப்படுத்தப்பட்டிருந்த 1.5 டன் மாம்பழங்களை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக, உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா் மருத்துவா் கதிரவன் கூறுகையில், ‘ரசாயன கற்கள், மருந்து தெளித்து விற்பனை செய்யும் பழங்களை மக்கள் வாங்குவதைத் தவிா்க்க வேண்டும். இதை சாப்பிடுவதால் செரிமான கோளாறு ஏற்பட்டு, வயிற்று உபாதைகள் அதிகளவு ஏற்படும். ரசாயன கற்களைப் பயன்படுத்துவோா் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT