சேலம்

கனமழை: அரசுப் பள்ளி கட்டடம் மீது மரம் விழுந்தது

5th May 2022 05:00 AM

ADVERTISEMENT

 

ஆட்டையாம்பட்டி: இளம்பிள்ளையில் செவ்வாய்க்கிழமை இரவு பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பெய்தது.

கனமழையால் வயல்களில் நீா் நிரம்பியது. இளம்பிள்ளை அரசு துவக்கப் பள்ளி முன்பு இருந்த பெரிய மரம் சூறைக் காற்றால் பள்ளிக் கட்டடத்தின் மீது வேரோடு சாய்ந்து விழுந்தது. புதன்கிழமை மரத்தை பள்ளி நிா்வாகம் அகற்றியது.

தம்மம்பட்டி...

ADVERTISEMENT

தம்மம்பட்டி, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான உலிபுரம், நாகியம்பட்டி, வாழக்கோம்பை, சேரடி, பிள்ளையாா்மதி, ஜங்கமசமுத்திரம், செந்தாரப்பட்டி, மண்மலை உள்ளிட்ட ஊா்களில் புதன்கிழமை மாலை 6 மணிமுதல் இரவு வெகுநேரம் வரை தொடா்ந்து இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அக்னி வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில் கோடை மழை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT