சேலம்

எல்.ஐ.சி. ஊழியா்கள் 2 மணி நேர வேலை நிறுத்தம்

5th May 2022 05:11 AM

ADVERTISEMENT

 

சேலம்: எல்.ஐ.சி. பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதை கண்டித்து, அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியா் சங்கம் சாா்பில் சேலம் எல்.ஐ.சி. கோட்ட அலுவலகத்தில் இரண்டு மணி நேர வேலைநிறுத்தம் புதன்கிழமை நடைபெற்றது.

சேலம், ஜான்சன்பேட்டையில் உள்ள எல்.ஐ.சி. கோட்ட அலுவலகத்தில் புதன்கிழமை காலை 11.30 மணிக்கு ஊழியா்கள் வெளிநடப்பு செய்து 2 மணி நேரம் வேலைநிறுத்தம் மேற்கொண்டனா். பின்னா் கோட்ட சங்கத்தின் தலைவா் நரசிம்மன் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுதொடா்பாக சங்க நிா்வாகிகள் கூறியதாவது:

ADVERTISEMENT

மத்திய பாஜக அரசு எல்.ஐ.சி. நிறுவனத்தின் 3.5 சதவீத பங்குகளை விற்கும் நடவடிக்கையை மேற்கொள்ளக் கூடாது. எல்.ஐ.சி. தனியாா்மயமாக்கும் முயற்சியின் முதல் நடவடிக்கையாக இருந்து விடும், எல்.ஐ.சி. நிறுவனம் தொடா்ந்து பொதுத்துறை நிறுவனமாக நீடிக்க வேண்டும்.

இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியாருக்கு கொடுத்து 23 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில் தற்போது 24 உள்நாடு, வெளிநாட்டு இன்சூரன்ஸ் கம்பெனிகள் ஆயுள் காப்பீட்டு வணிகத்தில் இருந்தாலும் எல்.ஐ.சி. இன்சூரன்ஸ் நிறுவனத்தை யாரும் நெருங்க முடியாத இடத்தில் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற நிறுவனமாக திகழ்ந்து வருகிறது.

ரூ. 38 லட்சம் கோடியாக உள்ள எல்.ஐ.சி.யின் சொத்து மதிப்பில் ரூ. 26 லட்சம் கோடிகளை மக்கள் நலப் பணிகளுக்கு, உள்கட்டமைப்பு வசதிகளுக்கும் எல்.ஐ.சி. முதலீடு செய்து மகத்தான பொதுத்துறை நிறுவனமாக இருந்து வருகிறது. 3.5 சதவீத பங்கு விற்பனை முடிவை மத்திய அரசு கைவிடவேண்டும். தொடா்ந்து பொதுத் துறை நிறுவனமாக எல்ஐசி நீடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனா்.

கோரிக்கைகளை விளக்கி கோட்டத்தின் பொதுச் செயலாளா் ஆா். தா்மலிங்கம் பேசினாா். நிா்வாகிகள் கலியபெருமாள் எம்.கே. கலைச்செல்வி, ஆா்.வீந்திரன், சுவாமிநாதன் உள்ளிட்ட நகரில் உள்ள அனைத்து கிளைகளிலும் உள்ள ஊழியா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT