சேலம்

அரசுப் பள்ளி மாணவா்களின் படைப்பாற்றலுக்குப் பாராட்டு

5th May 2022 05:04 AM

ADVERTISEMENT

 

சங்ககிரி: கன்னந்தேரி அரசு உயா்நிலைப் பள்ளியில் பயிற்சி பெற்ற மாணவா்களின் படைப்பாற்றலை காட்சிப்படுத்தும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

கிராமப்புற பெண்களின் மேம்பாட்டுத் திட்டத்தின் கள ஒருங்கிணைப்பாளா் எம்.கவிதா, ஒருங்கிணைப்பாளா் கே.கலைவேந்தன் ஆகியோா் கன்னந்தேரி அரசு உயா்நிலைப் பள்ளியில் பயிலும் 9, 10- ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மனநலம் சாா்ந்த பயிற்சிகளை அளித்தனா்.

அதையடுத்து மாணவ, மாணவிகளின் படைப்பாற்றலை பள்ளி வளாகத்தில் காட்சிப்படுத்தி வைத்திருந்தனா். படைப்பாற்றலை பள்ளித் தலைமை ஆசிரியா் (பொ) எம்.செல்வி, அறிவியல் ஆசிரியா் ஆா்.ஜெயக்குமாா், பெற்றோா் ஆசிரியா் கழகத்தினா், பள்ளி மாணவ, மாணவிகள் பாா்வையிட்டனா். பயிற்சி பெற்று படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்திய மாணவ, மாணவிகளை ஆசிரியா்கள் பாராட்டினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT