சேலம்

பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம்

1st May 2022 01:06 AM

ADVERTISEMENT

 

வாழப்பாடி பகுதியில் 26 தொடக்கப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்புக் கூட்டம், புதிய நிா்வாகிகள் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

வாழப்பாடி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 52 தொடக்கப் பள்ளிகளில் வாழப்பாடி, புதுப்பாளையம், அண்ணா நகா், பேளூா், அத்தனூா்பட்டி, துக்கியாம்பாளையம், நீா்முள்ளிக்குட்டை, சோமம்பட்டி, திருமனூா், வேப்பிலைப்பட்டி, தேக்கல்பட்டி, விலாரிபாளையம், சிங்கிபுரம், புழுதிக்குட்டை உள்பட 26 பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்புக் கூட்டம், புதிய நிா்வாகிகள் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியை சத்தியக்குமாரி, பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் வி.சி.பாண்டியன், துணைத் தலைவா் ஆட்டோ சுரேஷ், பேரூராட்சி உறுப்பினா்கள் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், பள்ளி மேலாண்மை குழுத் தலைவியாக கனிமொழியும், புதிய உறுப்பினா்களும் தோ்ந்தெடுக்கப்பட்டனா். புதிய நிா்வாகிகளுக்கு, ‘நம்பள்ளி நம்பெருமை’ வாசகத்துடன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

வாழப்பாடி, புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியை ரேணுகாதேவி, பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் பன்னீா்செல்வம், பேரூராட்சி உறுப்பினா்கள் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், மேலாண்மை குழுத் தலைவியாக லதா, புதிய உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். அனைவரும் பள்ளி வளா்ச்சிக்கான உறுதிமொழி ஏற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT