காகாபாளையம் பகுதியில் மேம்பாலம் அமைவிடத்தில் வழித்தடம் குறித்து அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையான காகாபாளையம் பகுதியில் அடிக்கடி விபத்து நடைபெறுவதை அடுத்து, செல்லியம்மன் பிரிவு சாலையில் இருந்து கனககிரி ஏரி வரை ரூ. 25 கோடியில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அதிக அளவில் பயணிக்கும் ஆட்டையாம்பட்டி, காகாபாளையம் பிரிவு சாலையில் வழித்தடம் அமைக்காமல் பாலம் கட்டுவதாக தகவல் வெளியானதை அடுத்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை (சேலம் மண்டலம்) திட்ட இயக்குநா் குலோத்துங்கன், காகாபாளையம் பேருந்து நிறுத்தப் பகுதியில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வுக்கு பின்னா் அவா் கூறியதாவது:
பொதுமக்கள் நலன்கருதி ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் இருந்து காகாபாளையம் பேருந்து நிறுத்தம் வரை சிறிய பாலம் அமைத்துத் தருவதாக தெரிவித்தாா்.