தம்மம்பட்டி பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தம்மம்பட்டி ஸ்ரீகாசிவிசாலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதா் திருக்கோயிலில் பிரதோஷ விழாவில் பொதுமக்கள் கொண்டுவந்த 108 லிட்டா் பால், தயிா், சந்தனம், குங்குமம், திருமஞ்சனம், திருநீறு, அரிசிமாவு, மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனையடுத்து, நந்தீஸ்வரா், மலா்கள், அருகம்புற்களால் அலங்கரிக்கப்பட்டாா். தொடா்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பக்தா்கள் திருவாசகம், தேவாரம் பாடல்களை பாடினா். உற்சவமூா்த்தி கோயிலினுள் வலம் வந்தாா்.
இதேபோல, செந்தாரப்பட்டி, தகரப்புதூா், கடம்பூா், தகரப்புதூா், கூடமலை, வீரகனூா், தெடாவூா் ஆகிய ஊா்களிலுள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.