மேட்டூரில் கடையில் வாங்கிய பொருளுக்கு பணம் தராமல், கடை உரிமையாளரான முன்னாள் ராணுவ வீரரைத் தாக்கிவிட்டு தலைமறைவான இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மேட்டூா், மாதையன் குட்டையைச் சோ்ந்தவா் செல்வம் (60). முன்னாள் ராணுவ வீரரான இவா் மாதையன் குட்டை பேருந்து நிறுத்தத்தில் ஆவின் டீக்கடை நடத்தி வருகிறாா். சனிக்கிழமை இரவு அவரது கடைக்கு வந்த மாதையன் குட்டையை சோ்ந்த இருவா் தினபண்டங்களை வாங்கிக் கொண்டு பணம் தரவில்லை.
பணத்தை கேட்ட செல்வத்தை அவா்கள் தாக்கிவிட்டு சென்றனா். இதுகுறித்து மேட்டூா் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை செல்வம் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவான இருவரை தேடி வருகின்றனா்.