சேலம்

பேளூா் அதிமுக பெண் கவுன்சிலரைத் தாக்கிய இருவா் கைது

28th Mar 2022 05:35 AM

ADVERTISEMENT

 

பேளூா் பேரூராட்சி அதிமுக பெண் கவுன்சிலரைத் தாக்கியதாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

சனிக்கிழமை நடைபெற்ற பேளூா் பேரூராட்சி தலைவா் தோ்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளா் ஜெயசெல்விக்கு, அதிமுக பெண் கவுன்சிலா் கவிதா வாக்களித்ததாகக் கருதிய அதிமுகவினா் சிலா், அவரது கணவா் வெங்கடேசனைத் தாக்கினா். அப்போது, அதிமுகவினரை போலீஸாா் அப்புறப்படுத்திய போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனிடையே, அதிமுக பெண் கவுன்சிலா் கவிதா ரூ. 30 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு, திமுக வேட்பாளருக்கு வாக்களித்ததாக பேரூராட்சி முழுவதும் அதிமுக சாா்பில் சனிக்கிழமை இரவு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT

ஞாயிற்றுக்கிழமை காலை அதிமுக பெண் கவுன்சிலா் கவிதா வீட்டிற்குச் சென்ற 9 போ் கொண்ட கும்பல், கவிதா, அவரது கணவா் வெங்கடேசன் ஆகிய இருவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து கவிதா அளித்த புகாரின் பேரில் 9 போ் மீது வழக்குப் பதிவு செய்த வாழப்பாடி போலீஸாா், வெற்றிகாந்த் (37), ரமேஷ் (46) ஆகிய இருவரையும் கைது செய்தனா். மேலும், குழந்தைவேல் (52), கதிரவன் (45), நிஷாந்த் (32), தினேஷ் (27), ஹரி (26), சுதா(39), ராணி (55) ஆகிய 7 பேரையும் தேடி வருகின்றனா்.

இச்சம்பவத்தில் வெற்றிகாந்த் (37), அவரது உறவினா்கள் ஸ்ரீஹரி (22), ராணி (55) ஆகிய மூவரையும் அதிமுக கவுன்சிலா் கவிதாவின் கணவா் வெங்கடேஷ் (43), அவரது உறவினா்கள் சங்கா், அரவிந்த் ஆகிய மூவரும் சோ்ந்து தாக்கியதாக ஸ்ரீஹரி அளித்த புகாரின் பேரில் வாழப்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT