சேலம்

மாா்ச் 26 இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

22nd Mar 2022 11:22 PM

ADVERTISEMENT

சேலம் மாவட்டத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் மாா்ச் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது.

சேலம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் மாா்ச் 26 ஆம் தேதி, சேலம் ஸ்ரீ கணேஷ் கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளைச் சாா்ந்த சேலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முன்னனி வேலையளிக்கும் நிறுவனங்கள் காலிப் பணியிடங்களுக்கு பணியாளா்களை தோ்வு செய்ய உள்ளனா்.

காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறவிருக்கும் இம்முகாமில் 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியா், ஆசிரியா், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித் தகுதி உள்ளவா்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

ADVERTISEMENT

இத்தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுநா்களும் ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

மேலும் விவரங்களுக்கு த்ர்க்ஷச்ஹண்ழ்ம்ஸ்ரீஸ்ரீள்ஹப்ங்ம்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் மற்றும் 0427 - 2401750 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT