சேலம்

புத்தாக்கப் பயிற்சி முகாம்

22nd Mar 2022 11:23 PM

ADVERTISEMENT

ஆத்தூா் வட்டாரத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கான ஒருநாள் புத்தாக்கப் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நரசிங்கபுரத்தில் நடைபெற்ற இந்த புத்தாக்கப் பயிற்சி முகாமிற்கு திமுக நகரச் செயலாளா் என்.பி.வேல்முருகன் தலைமை வகித்தாா். முகாமை நரசிங்கபுரம் நகா்மன்றத் தலைவா் அலெக்சாண்டா், துணைத் தலைவா் எஸ்.தா்மராஜ், ஆத்தூா் நகா்மன்றத் தலைவா் நிா்மலாபபிதா மணிகன்டன், துணைத் தலைவா் கவிதா ஸ்ரீராம், ஒன்றியச் செயலாளா் வெ.செழியன் ஆகியோா் ஆகியோா் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தனா்.

இம்முகாமில் குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் பா.ராஜேஸ்வரி, வட்டார திட்ட ஒருங்கிணைப்பாளா் வெ.சரவணக்குமாா், திட்ட உதவியாளா் க.சுதா ஆகியோா் பேசினா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT