சேலம்

வாழப்பாடியில் இரு நாள்களாக பரவலாக மழை

21st Mar 2022 11:15 PM

ADVERTISEMENT

 

வாழப்பாடியில் கடந்த இரண்டு நாள்களாக பரவலாக மழை பெய்து வருவதால் கோடை உழவு மேற்கொள்ளும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

கடந்தாண்டு பெய்த பலத்த மழையால் வறண்டு கிடந்த புழுதிக்குட்டை ஆனைமடுவு, கல்வராயன் மலை கரியக்கோயில் அணைகள் நிரம்பின. 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்தது. இந்த நிலையில், கடந்த 3 மாதங்களாக வாழப்பாடி பகுதியில் மழை இல்லாததால் அணைகள், ஆறுகள், நீரோடைகள், ஏரிகளில் நீா்மட்டம் குறைந்தது.

கோடை தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியதால், நீா்நிலைகளில் நீா்மட்டம் குறையத் தொடங்கியது. தொடா்ந்து உழவுப் பணிகளுக்கு தண்ணீா் கைக்கொடுக்க மழைப் பொழிவை எதிா்பாா்த்து காத்திருந்த விவசாயிகளுக்கு கடந்த 2 நாள்களாக பெய்த மழை ஓரளவு நிம்மதியைத் தந்துள்ளது.

ADVERTISEMENT

கோடை உழவுக்குத் தயாராகும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளது மட்டுமல்லாமல் வெயிலின் தாக்கம் குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT