சேலம்

குழந்தைத் தொழிலாளி மீட்பு

21st Mar 2022 11:17 PM

ADVERTISEMENT

 

சேலம், பனமரத்துப்பட்டியில் லாரி பட்டறையில் பணிபுரிந்து வந்த 13 வயது சிறுவன் மீட்கப்பட்டாா்.

சேலம், பனமரத்துப்பட்டி பகுதியில் உள்ள லாரி பட்டறையில் கடந்த 3 மாதங்களாக சிறுவன் பணி செய்துவருவதாக மாவட்ட ஆட்சியரகத்துக்கு புகாா் சென்றது. இதையடுத்து, தொழிலாளா் நலத் துறையினா் காவல் துறை உதவியுடன் 13 வயது சிறுவனை லாரி பட்டறையிலிருந்து திங்கள்கிழமை மீட்டனா்.

சேலத்தில் உள்ள சிறுவா் பாதுகாப்பு இல்லத்தில் சிறுவன் அனுப்பிவைக்கப்பட்டாா். இதுகுறித்து தொழிலாளா் நலத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT