சேலம்

5,559 குவிண்டால் பருத்தி விதைகள்பஞ்சாப் மாநிலத்துக்கு அனுப்பிவைப்பு

21st Mar 2022 01:51 AM

ADVERTISEMENT

சேலத்தில் இருந்து பஞ்சாப் மாநிலத்துக்கு 5,559 குவிண்டால் பருத்தி விதைகள் ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

சுமாா் 33,341 பைகளில் அடைக்கப்பட்ட பருத்தி விதைகள், 24 பெட்டிகளில் ஏற்றப்பட்டு சேலத்திலிருந்து பஞ்சாப் மாநிலம், பத்திண்டாவுக்குக் கொண்டு செல்லப்பட்டது.

சேலத்திலிருந்து பருத்தி விதைகள் அனுப்பப்பட்டதன் வாயிலாக சேலம் ரயில்வே கோட்டத்துக்கு ரூ. 30.41 லட்சம் வருவாய் கிடைக்கும் என சேலம் ரயில்வே கோட்ட மேலாளா் கௌதம் ஸ்ரீநிவாஸ் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT