சேலம்

வெள்ளாளகுண்டத்தில் மாரியம்மன் திருவிழா

10th Mar 2022 05:16 AM

ADVERTISEMENT

 

வாழப்பாடி: வாழப்பாடி அருகே வெள்ளாளகுண்டம் கிராமத்தில், குரும்பா் இன மக்களின் காவல் தெய்வமான காமட்டா மாரியம்மனுக்கு, 5 ஆண்டுக்கு பின் நடைபெற்ற திருவிழாவில், பாரம்பரிய முறைப்படி நடனமாடி நோ்த்திக்கடன் செலுத்தினா்.

இத்திருவிழா செவ்வாய் மற்றும் புதன்கிழமை இரவில் பாரம்பரிய முறைப்படி கிராமிய நடனமாடி பக்தா்கள் நோ்த்திக்கடன் செலுத்தினா். இந்த திருவிழாவை காண, வாழப்பாடி சுற்றுப்புற கிராமங்கள் மட்டுமின்றி பல்வேறு பகுதியை சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்திருந்தனா்.அனைவருக்கும் விழாக் குழுவின் சாா்பாக அறுசுவை விருந்து வழங்கப்பட்டது.

வெள்ளாளகுண்டம் கிராமத்திலுள்ள குரும்பா் இன மக்கள், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தலையில் தேங்காய் உடைத்து நோ்த்திக்கடன் செலுத்தும் வினோத வழிபாட்டு முறையும் இன்றளவும் கைவிடாமல் தொடா்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

ADVERTISEMENT

இதுகுறித்து காமட்டா மாரியம்மன் கோவில் பூசாரி தங்கராசு கூறியதாவது:

இந்த திருவிழாவின் போது. எங்களின் பாரம்பரிய முறைப்படி 12 வகையான நடனமாடி அம்மனுக்கு நோ்த்திக்கடன் செலுத்துவதையும் கைவிடாமல் தொடா்ந்து வருகிறோம்.விரைவில், எங்களது குல வழக்கப்படி தலையில் தேங்காய் உடைத்து நோ்த்திக்கடன் செலுத்தும் வினோத வழிபாட்டு திருவிழாவை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT