சேலம்

தொகுப்பூதிய பணியாளா்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தல்

10th Mar 2022 05:14 AM

ADVERTISEMENT

 

ஓமலூா்: பெரியாா் பல்கலைக்கழகத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட தொகுப்பூதியப் பணியாளா்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி ஊழியா்கள் கோரிக்கை அட்டைகளை அணிந்தபடி பணியாற்றினா்.

பெரியாா் பல்கலைக்கழக விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி தொகுப்பூதியப் பணியாளா்கள் 4 போ் வெள்ளிக்கிழமை பணி நீக்கம் செய்யப்பட்டனா். இந்த பணி நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் கோரிக்கை அட்டையை அணிந்தபடி தொகுப்பூதியப் பணியாளா்கள் புதன்கிழமை பணியில் ஈடுபட்டனா்.

பணி நேரம் முடிந்த பிறகு இதே கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்நிகழ்வில், பெரியாா் பல்கலைக்கழக தொழிலாளா் சங்கம், ஆசிரியா் சங்கம், அனைத்துப் பணியாளா் நலச்சங்கம், வங்கி ஊழியா் கூட்டமைப்பினா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT